• Jan 19 2025

சூப்பர் ஸ்டாரே இப்படி சொன்னா எப்படி? விமர்சனங்களுக்கு உள்ளாகிய நடிகர் மகேஷ் பாபுவின் பேச்சு...

subiththira / 5 months ago

Advertisement

Listen News!

குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் மகேஷ் பாபு. பின்னர், 1999-ம் ஆண்டு வெளியான ராஜ குமாருடு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமானார். அது மட்டும் இல்லாமல் இந்த படம் அவருக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை பெற்று கொடுத்தது. 


பின்பு, அவர் தன் நடிப்பு திறமையின் மூலம் டோலிவுட்டின் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். இவருக்கென ரசிகர்கள் ஏராளமான பேர் இருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டியில் அவர், இந்தியில் நடிக்க எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்ததாகவும் ஆனால் எனக்கு அதில் நடிக்க விருப்பம் இல்லை. 


தெலுங்கு திரையுலகில் எனக்கு கிடைக்கும் வெற்றி மற்றும் பாராட்டுக்கள் போதும் எனவும், டோலிவுட்டைத் தவிர வேறு எந்தத் திரைப்படத் துறைகளுக்கும் போக மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.  மகேஷ் பாபுவின் இந்த கருத்துக்கள் தற்போது இணையவாசிகளிடம் விமர்சனங்களை பெற்று வருகிறது, மேலும் இந்த கருத்து திரையுலகினரின் கவனத்தையும் அவரது ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்ததுள்ளது. 

Advertisement

Advertisement