• Sep 09 2024

"மலை" படத்தின் ஆடியோ ரைட்ஸை வாங்கியுள்ள பிரபல நிறுவனம் !

Thisnugan / 3 weeks ago

Advertisement

Listen News!

அண்மையில் வெளியான "போட்" படத்தை தொடர்ந்து யோகிபாபு நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படமான "மலை" அறிமுக இயக்குனர் ஐ.பி.முருகேஷின் கதை மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ளது.யோகிபாபு மற்றும் லட்சுமி மேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இத் திரைப்படம் ஓர் சூழல் நேய கதையுடன் உருவாகி வருகிறது.

Malai movie

வருகிற செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் "மலை" திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 2022 ஆம் ஆண்டளவில் ஆரம்பமாகியிருந்தது.இந்த படத்தில் காளி வெங்கட், சிங்கம்புலி, ராமச்சந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Image

இந்நிலையில் "மலை" படத்தின் முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.டி.இமான் இசையமைத்துள்ள 'மலை' படத்தின் ஆடியோ ரைட்ஸை வாங்கியுள்ளது பிரபல நிறுவனமான 'டிரெண்ட் மியூசிக்'.இச் செய்தியை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் இமான் சிறந்தவோர் ஆல்பத்திற்கு தயாராகுங்கள் என பதிவையும் இட்டுள்ளார்.



Advertisement

Advertisement