• May 20 2024

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சிபி சக்ரவத்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் டான்.

இது ரசிகர்களிடத்தே நல்ல விமர்சனத்தை பெற்று அதிக வசூல் ஈட்டி வருகின்றது.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எஸ்.கே. 20. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை அனுதீப் இயக்கியுள்ளார்.

This image has an empty alt attribute; its file name is fbc20ee7-sivakarthikeyan-completes-a-decade-in-films-expresses-gratitude-001.jpg

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சத்யராஜ், ரிது வர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் இப்படம் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கின்றது.

Advertisement

Advertisement