• May 09 2024

விக்ரம் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் கொடுத்த Review..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தினை லோகேஷ் கனகராஜ். இயக்கியுள்ளார். கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் நேற்றைய தினம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் இப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் என்பன வெளியாகின.

இதனை பார்த்த ரசிகர்கள் பான் இந்தியா ஹிட்டிற்கு கோலிவுட் தயாராக இருக்கிறது என கூறிவருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடந்த விக்ரம் பட விழாவில் பலரும் விக்ரம் படம் குறித்து பேசி இருந்தார்கள், அதில் சொன்ன விஷயம் ஒரு ரசிகர்களை குஷியாகி இருக்கின்றது.

அவர் கூறியதாவது : " மாஸ்டர் 50% லோகேஷ் படம், ஆனால் விக்ரம் கமலுக்காக லோகேஷ் செய்த 100% fanboy சம்பவம். நான் படம் பார்த்துவிட்டேன், எப்போதும் ஆடியோ லான்ச் விழாக்களில் படம் சூப்பராக இருக்கிறதென சொல்லவேமாட்டேன்.

ஆனா உண்மையாகவே விக்ரம் திரைப்படம் பயங்கரமா இருக்கு, பான் இந்தியா அளவில் வெற்றியடைய கூடிய எல்லா தகுதிகளும் விக்ரம் படத்திற்கு உள்ளது" என மாஸ்ஸாக பேசியுள்ளார் அனிருத்.

விக்ரம் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் கொடுத்த Review இதுவரை அவர் சொல்லாத விஷயமாம் என கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement