• Nov 13 2025

மம்முட்டிக்கு ஏன் அங்கீகாரம் கிடைக்கவில்லை.. திரைப்பட விருதுக் குழுவை விளாசிய பிரகாஷ் ராஜ்

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளிலும் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்த நடிகர் மம்முட்டி, சமீபத்தில் வெளியான “பிரம்மயுகம்” திரைப்படத்துக்காக தேசிய திரைப்பட விருதில் சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளார். இந்த விருது அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அதே சமயம் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கும் முறையில் பாகுபாடுகள் உள்ளன என்ற குற்றச்சாட்டையும் தூண்டியுள்ளது.


இந்த சர்ச்சைக்குப் பின்னணியாக, கேரள மாநில திரைப்பட விருது குழுத் தலைவர் மற்றும் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்ட கூற்று தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு ஊடக சந்திப்பில், பிரகாஷ் ராஜ் தேசிய திரைப்பட விருதுகள் குறித்து கடுமையான கருத்தைத் தெரிவித்தார். 

அதன்போது பிரகாஷ்ராஜிடம் தேசிய விருதில் மம்முட்டிக்கு ஏன் உரிய அங்கீகாரம் தரப்படுவதில்லை? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “FILES , PILES போன்ற பெயர் உள்ள படங்களுக்கு தேசிய விருது கிடைப்பதை பார்க்கும் போதே நமக்குத் தெரிகிறது.. அவை நடுநிலையுடன் அறிவிக்கப்படுவதில்லை என்று... இதைச் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.” என்று கூறினார்.


அவர் மேலும், "மம்முட்டி போன்ற சிறந்த நடிகர்கள் தங்கள் துறையில் தொடர்ந்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால், உரிய அங்கீகாரம் தேசிய அளவில் வழங்கப்படாதது நியாயமில்லை. அவரது திறமைகளை மரியாதையுடன் மதிக்க வேண்டும்,” என்றும் குறிப்பிட்டார்.

பிரகாஷ் ராஜ் கூறிய விமர்சனம் சாதாரண கருத்தாக அல்ல. அவர் தற்போது கேரள திரைப்பட விருதுக் குழுத் தலைவர் என்பதால், அவரது கருத்து தொழில்துறை வட்டாரங்களில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement