• Nov 04 2025

தனுஷுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே ..! இயக்குநர் யாரு தெரியுமா? அதகள அப்டேட் இதோ

Aathira / 23 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகின்றார்.  இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளை சம்பாதித்து வருகின்றன.

இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் கூட்டணியில்  தனுஷ் நடிக்கும் படங்களுக்கு இப்போது இருந்தே எதிர்பார்ப்புகள் அதிகமாகி உள்ளன. இவர்கள் ஏற்கனவே கர்ணன் படத்தில் கூட்டணி அமைத்திருந்தனர். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. 

அதன்படி தனுஷின் 56வது படத்தை மாரி செல்வராஜ்  இயக்க உள்ளார் என்ற தகவல் அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில்  தயாராக உள்ளதாகவும்,  வரலாற்று கதை அம்சம் நிறைந்த படமாக உருவாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.



இந்த நிலையில், நடிகர் தனுஷின் 55 ஆவது படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதில் மீண்டும் ரியல் லைஃப் அடிப்படையில் உருவாகும் கதையில் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த படத்தை  ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சாய் அபயங்கர் இசை அமைக்க உள்ளார்.  சமூகத்தில் கவனிக்கப்படாமல் போகும்,  நம் வாழ்க்கையில் அவசியமான மனிதர்களின் பயணம் தொடர்பான கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Advertisement

Advertisement