• Nov 13 2025

ராஜியின் செயலால் கடுப்பான கதிர்.! சொந்த வீட்டில் ஜாலியாக Fun பண்ணும் செந்தில்...

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, செந்தில் வீட்ட போய் மீனாவை காணேல என்று தேடுறார். பின் போன் எடுக்கவும் மீனா எடுக்கல என்றவுடனே கோமதிக்கு போன் எடுத்து மீனா போன் எடுக்கல அங்க நிக்கிறாளா என்று கேட்கிறார். பின் செந்தில் மீனா இன்னும் கிளம்பலயா என்று கேட்க கோமதி நீதானே மீனாவ இங்கேயே இருக்க சொன்னீ பிறகு ஏன் இப்படி கேட்கிற என்கிறார். 


மேலும் இந்த வயசிலேயே ஞாபவ மறதியா என்கிறார் கோமதி. அதனை அடுத்து கோமதி செந்திலை இரவு சாப்பிடுறதுக்கு வரச் சொல்லுறார். அதனை அடுத்து செந்தில் பாண்டியன் வீட்ட போய் நிற்கிறார். அங்க போய் மீனாவ தனியா கூப்பிட்டு நான் உன்னை இங்க நிற்கச் சொன்னேனா என்று கேட்கிறார். அதுக்கு மீனா தனக்கு இங்க இருக்கத் தான் பிடிச்சிருக்கு என்கிறார்.

பின் செந்தில் கோமதி கிட்ட நான் இவளை இங்க இருக்கச் சொல்லவே இல்ல என்கிறார். அதனை அடுத்து செந்தில் அண்ணனையும் தம்பியையும் தன்ர வீட்ட வரச்சொல்லுறார். அதைக் கேட்ட பழனி இது நல்ல யோசனையா இருக்கு என்கிறார். பின் எல்லாரும் வெளிக்கிட்டு போகிறார்கள். அதனை அடுத்து எல்லாரும் அங்க போய் ஜாலியாக இருக்கிறார்கள்.


மறுநாள் காலையில் கதிர் ராஜிக்கு ட்ரெயினிங் சொல்லிக் கொடுக்கிறார். அப்ப ராஜி சரியா செய்யாததைப் பார்த்த கதிர் பேசுறார். அந்த நேரம் பார்த்து ராஜி மயங்கி விழுற மாதிரி நடிக்கிறார். அதைப் பார்த்த கதிர் ராஜிக்கு உண்மையாவே உடம்பு சரியில்ல என்று நினைத்து பயப்படுறார். பின் ராஜி சும்மா நடிச்சேன் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement