• Nov 04 2025

ரோகிணிக்கு நல்லது செய்த விஜயா.. First Night ரூமில் மனோஜ் செய்த காரியம்? இன்றைய எபிசோட்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், பார்வதி சிவனுடன் கதை சொல்லி ரெக்கார்ட் பண்ணிக் கொண்டு இருக்க, அங்கு சென்ற விஜயாவும் சிந்தாமணியும் அதிர்ச்சி அடைகின்றனர். பார்வதி பண்ணுவது விஜயாவுக்கு பிடிக்கவில்லை.

இதனை சிந்தாமணியிடம் சொல்ல, அப்படி என்றால் சிவனை மேலே அனுப்பிடலாமா? என்று கேட்க, வேண்டாம் வேண்டாம் இவங்க ரெண்டு பேரும் கதைக்காம இருந்தா போதும் என்று சொல்லுகிறார்.

பின்பு பார்வதி வந்ததும், என்னோட மருமகள் ரோகிணி லட்சாதிபதி ஆக போகிறா, 275 வீடுகளுக்கு டிவி, பிரிஜ் எல்லாம் கொடுக்க போறா என்று பெருமையாக பேசுகிறார். மேலும் இதுவரை மனோஜ், ரோகிணியை பிரிச்சு வைச்சு இருந்தேன், இப்போ அவங்களுக்கு First Night அரேஞ் பண்ண வேண்டும் என்று சொல்லுகிறார்.


மேலும், அந்த இடத்திற்கு சென்ற மீனாவும் 275 வீடுகளுக்கு பூ ஆர்டர் எடுத்து இருக்கா என்று சொல்ல, இதனை எப்படியாவது தடுக்க வேண்டும் என சிந்தாமணி பிளான் போடுகிறார்.

அதன்பின், பார்வதி, சிந்தாமணி மனோஜ் ரூமை அலங்காரம் பண்ணுகிறார். அங்கு வந்த முத்து இதை பார்த்து வியக்க, எல்லாம் காசு பண்ணுற வேலை தான் என அண்ணாமலை சொல்லுகிறார்.

பின்பு ஸ்ருதி, ரவி வரவும் மனோஜ் வந்தால் இப்படி தான் பண்ணுவான் என முத்து நடித்துக் காட்ட, ஸ்ருதி அதற்கு பெட் கட்டுகிறார். பின் வீட்டிற்கு வந்த மனோஜ், முத்து சொன்னது போல பேசுகிறார். 

இறுதியில், மனோஜ், ரோகிணி ரூமுக்குள் ரொமான்ஸ் பண்ண, மனோஜ் பாட்டு பாடுவதாக சொல்லி கத்துகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement