• Nov 13 2025

சுபிக்ஷா பேச பேச வெளிறிய ஹவுஸ்மேட்ஸ் முகம்.! பிரஜின் சொன்ன வார்த்தை

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் 20 போட்டியாளர்களுடன் பங்கேற்ற இந்த சீசன், அதிலிருந்து நந்தினி,  பிரவீன் காந்தி, அரோரா, ஆதிரை  இறுதியாக கலையரசனும் வெளியேறியிருந்தனர். 

இவர்களின் இடத்தை ஈடு செய்யும் வகையில்  நான்கு வைல்ட் கார்ட் என்ட்ரி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இவர்கள் உள்ளே நுழையும் போது  தங்களுடைய கருத்துக்களை அதிரடியாக தெரிவித்து சென்றனர். இது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அதன்படியே உள்ளே சென்ற சாண்டோ, பிரஜின்  போட்டியாளர்களின் முகத்திரையை  கிழித்திருந்தனர்.  இது மொத்த ஹவுஸ்மேட்சுக்கும் அதிர்ச்சியாக காணப்பட்டது. அதிலும் பாரு, அரோரா  போன்றவர்களின் உண்மையான நிலை பற்றி  தங்களுடைய கருத்தை தெரிவித்து அதிர்ச்சி கொடுத்தனர்.


இந்த நிலையில்,  பிக் பாஸ் போட்டியாளரான   சுபிக்ஷாவிடம் எதற்காக நீங்க பிக் பாஸ் வந்தீங்க என்று பிரஜின், சாண்டா கேள்வி எழுப்பினர்.

அவர் நான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆவதற்கும், சினிமா வாய்ப்பை பெறுவதற்கும்  வந்தேன் என்று சொல்லுகிறார்.  இதை கேட்ட அவர்கள்  உங்க கேம்  பிளே நல்லா தான் இருக்குது.  நீங்க இதையே கண்டினியூ பண்ணுங்க  என்று அவரை புகழ்ந்து பேசுகின்றனர். 

மேலும் உங்களுக்கு போட்டியா யார நினைக்கிறீங்க என்று கேட்க, அவர் சபரியை சொல்லுகின்றார்.  அதற்கான காரணம்  தனக்கு அவர்  போட்டியாக தெரிவதாக சொல்லுகின்றார். 

Advertisement

Advertisement