தமிழ் திரைத்துறையில் தனித்துவமான சிந்தனை, புதிய முயற்சிகள், மற்றும் கலைக்கான ஆழ்ந்த பற்றுடன் திகழும் நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் குறித்து நடிகை மோகினி சமீபத்தில் கூறிய வார்த்தைகள் ரசிகர்களின் இதயத்தை தொட்டுள்ளன.

அதன்போது, “பார்த்திபன் சார் கூட ‘உன்னை நினைத்து பாடுகிறேன்’ படத்தில நடிச்சிருக்கேன். அவர் பேசி தாஜ் மஹாலைக் கூட வித்திடுவார். மிகவும் திறமையான மனிதர். அவ்ளோ வித்தியாசமா யோசிப்பார். ஆனா, அவர் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துக்கு போவார்னு நம்பினேன்... அவர் கிட்ட இருந்து இன்னும் நிறைய விஷயங்கள் வெளிய வரும் என்று நினைத்தேன்” என்று நடிகை மோகினி தெரிவித்தார்.
பார்த்திபன் தமிழ் சினிமாவில் தனது கலைப் பாதையை சிறு கதாபாத்திரங்களில் இருந்து தொடங்கி, தனது தனித்துவமான நடிப்பு மற்றும் புதுமையான சிந்தனையால் ரசிகர்களிடம் ஒரு தனி இடத்தைப் பெற்றார்.

இந்நிலையில் நடிகை மோகினி தனது நினைவுகளை பகிர்ந்து கொண்ட போது, பார்த்திபனின் வித்தியாசமான பேச்சு திறமையும், தன்னம்பிக்கையும் பற்றி கூறியது அனைத்து ரசிகர்களையும் கவர்ந்திருந்தது. சமூக வலைத்தளங்களில் பலரும் மோகினியின் இந்த கருத்தைப் பகிர்ந்து, பார்த்திபனின் திறமையை மீண்டும் பாராட்டி வருகின்றனர்.
                             
                            
                            
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!