• Nov 04 2025

வைல்ட் கார்ட்ல வந்தவங்களை பொளந்துகட்டிய பார்வதி.. ஓல்ட் ஹவுஸ்மேட்ஸ் கிரேட் எஸ்கேப்

Aathira / 22 hours ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு  ஒரு மாதத்தை எட்ட உள்ளது.  ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் 10 ஆண் போட்டியாளர்கள்,  9 பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை  என மொத்தம் 20 பேர் கலந்து கொண்டனர். 

இதில் இருந்து, சொந்த விருப்பத்தினால் நந்தினி நிகழ்ச்சியை விட்டு வெளியேற,  அதன் பின்பு  பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை இறுதியாக கலையரசனும் எலிமினேட் ஆகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்றனர். 

கடந்த வார நாமினேஷனில் விஜே பார்வதி, கலையரசன், கம்ருதீன், கானா வினோத் மற்றும் அரோரா ஆகிய ஐந்து பேர்  இடம் பெற்றனர். அவர்களில்  அரோராவும் கலையரசனும் குறைந்த வாக்குகளை பெற்றனர். இதனால் டபுள் எவிடெக்ஷன் இருக்குமோ என்று ரசிகர்கள்  எதிர்பார்த்தனர். 

எனினும்  இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி கலையரசனை எலிமினேட் செய்ததோடு, அவரை மேடையில் வைத்து  வறுத்தெடுத்திருந்தார்.  அதாவது உங்களுக்காக நாங்க பீப் சவுண்ட் போடணுமா?  என்று கலையரசன் கெட்ட வார்த்தை பேசியதை சுட்டி காட்டி இருந்தார். 


இதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக  திவ்யா கணேஷ், சாண்ட்ரா , பிரஜின் மற்றும் அமித் ஆகியோர் உள்ளே  சென்றிருந்தனர். இவர்கள் உள்ளே சென்றதும்  பேப்பர், பேனாவை கொடுத்து பிக் பாஸ் வந்ததற்கான காரணத்தை  ஒவ்வொரு போட்டியாளரிடமும்  கேட்டு அவர்களின் முகத்திரையை கிழித்து இருந்தனர். 


இந்த நிலையில்,  பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு 29வது  நாளான இன்று முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.  அதில் விஜே பார்வதி உள்ளே வந்த நான்கு பேரையும் வெளுத்து வாங்கியுள்ளார். 

அதன்படி குறித்த ப்ரோமோவில்,  உள்ளே வந்த பிரஜின் நான் அப்படி பண்ண கூடாது, இப்படி பண்ண கூடாது என்று சொன்னாரு.. ஆனா அவர் என்ன பண்ணாரு? உள்ளே வந்து கொசு அடிக்கிற மாதிரி நம்மள மோக் பண்ணிட்டு இருக்காரு... 

மேலும் திவ்யாவை பார்த்து, நாங்க வெளியே இருந்து நீங்க பண்ணினது எல்லாத்தையும் பாத்துட்டோம்.. சொல்லுற  மாதிரி நீங்க  எதுவுமே பண்ண இல்லை என்று திவ்யா சொன்னா...  அதை சொல்றதுக்கு நீங்க யாரு? என்று பார்வதி கேள்வி கேட்டார். 

எனக்கு தெரியும் நான் என்ன பண்ண வேண்டும் என்று.. இந்த சொசைட்டில நான்கு பேர் நான்கு விதமா பேசுவாங்க.. அந்த நான்கு பேரும் நீங்க தான்  என்று  வந்த நான்கு பேரையும்  வெளுத்து வாங்கியுள்ளார் பார்வதி. எனவே இதற்கு அவர்கள் எப்படி பதிலடி கொடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .


Advertisement

Advertisement