• Jan 15 2025

சமந்தாவுக்கு க்யூட்டாக ப்ரோபோஸ் செய்த நபர்! ரியாக்ட் மூலம் ஓகே சொன்னாரா?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரைஉலகில் முக்கிய நடிகையாக திகழ்பவர் தான் நடிகை சமந்தா. இவர் தமிழில் மட்டும் இல்லாமல் பல மொழிகளிலும் நடித்து பிரபலமாக காணப்படுகின்றார்.

2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் இவர்களுடைய திருமண வாழ்க்கை நீடிக்க வில்லை. நான்கு ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. அதன் பின்பு இருவரும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று தத்தமது வழிகளில் தமது கேரியரை நோக்கி நகர்ந்தார்கள்.

இதைத்தொடர்ந்து சமந்தா ஒருவகை தோல் வியாதியில் அவதியுற்றார். அதற்காக பல சிகிச்சைகளையும் மேற்கொண்டார். தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்துள்ளார்.

அதன் பின்பு விஜய தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக குஷி படத்தில் நடித்திருந்தார். அதில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. தற்போது தனது கேரியரில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றார்.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது.


இந்த நிலையில், அன்றைய நாளில் ரசிகர் ஒருவர் நடிகை சமந்தாவிற்கு தனது காதலை ப்ரோபோஸ் செய்து ப்ளீஸ் என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள் என கூறி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதை பார்த்த நடிகை சமந்தா, வீடியோவின் பின்னணியில் உள்ள உடற்பயிற்சி கூடம் என்னை கிட்டத்தட்ட சம்மதிக்க வைக்கிறது என அந்த வீடியோவின் கமெண்ட் பாக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார். இது விளையாட்டாக அவர் செய்திருந்தாலும், இந்த வீடியோவிற்கு நடிகை சமந்தா ரியாக்ட் செய்ததன் மூலம் தற்போது சமூக வலைத்தளங்களில் படுவைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement