• Aug 15 2026

எழிலை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய பாக்கியா... எதிர்பாராத திருப்பத்தில் பாக்கியலட்சுமி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி  உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

ஏற்கனவே, ஜெனி இரண்டாவது முறையாக கர்ப்பமானதால் அதை வைத்து அமிர்தாவை குத்திக்காட்டி பேசுகின்றார் ஈஸ்வரி. மேலும் நீதான் நிலா மட்டும் போதும் வேற பிள்ளை வேண்டாம் என எழிலிடம் சொன்னியா என மேலும் காயப்படுத்துகின்றார்.

தற்போது வெளியான ப்ரோமோவில், எழில் அமிர்தாவை கூட்டிக்கொண்டு வந்து ஈஸ்வரியிடம் குழந்தை விஷயத்தை பற்றி அமிர்தாவிடம் என்ன சொன்னீங்க எனக்  கேட்கின்றார்.

அதற்கு உன்னிடம் எல்லாத்தையும் பத்தி வச்சிட்டாளா? இவ எப்ப உன்ட லைப்ல வந்தாளோ அப்பவே எல்லாம் உன்ன விட்டு போச்சு.. அப்ப இருந்தே ஒன்றும் நல்லதா நடக்கல என்று பேசுகிறார்.

அதற்கு எழில் இதுக்கு மேல ஏதும் பேசாதைங்க பாட்டி என சொல்ல, அப்படி தான் பேசுவேன் இங்கு நான் சொல்வதை கேட்டுட்டு இருக்கிற என்றால் இரு.. இல்லையென்றால் வீட்டை விட்டு வெளியே போ என ஈஸ்வரி பேசுகின்றார்.

இதனால் பாக்கியா இனி இந்த வீட்டுல இருக்காத.. என்று எழிலை வீட்டை விட்டு போகுமாறு கூறி அழுகின்றார். எழிலும் அமிர்தா நிலாவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே போகின்றார் இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement