• Jan 19 2025

இன்று வெளியாகிறது பிரபுதேவாவின் அடுத்த அப்டேட் ! வெளியிட்டு வைப்பது யார் தெரியுமா ?

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா தாண்டி இந்திய அளவில் பெரிதும் பாரட்டப்படும் நடிகர் மற்றும் நடன இயக்குனரான பிரபு தேவா அண்மைக் காலமாக நடிக்கும் தமிழ் திரைப்படங்கள் வரிசையாக வெளியாகிக்கொண்டிருக்கும் இந்நிலையில் பிரபு தேவாவின் அடுத்த பட அப்டேட் வெளியாகவிருக்கிறது.

Prabhu Deva Wallpapers - Wallpaper Cave

பிரபு தேவா தற்போது "சார்லி சாப்ளின்" திரைப்படத்தின் இயக்குனரான சக்தி சிதம்பரத்துடன் இணைந்து புதிய காமெடி படமொன்றில் நடித்து வந்த நிலையில் தயாரிப்பாளர்களால்  படத்தின் தலைப்பானது  "ஜாலி ஓ ஜிம்கானா" என உத்தியோகபூர்வமாக அறிவைக்கப்பட்டது.

Image

இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.அதாவது  "ஜாலி ஓ ஜிம்கானா" படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டரானது இன்று நடிகர் விஜய் சேதுபதி அவர்களால் வெளியிட்டு வைக்கப்படும் என உத்தியோக பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.





Advertisement

Advertisement