• Sep 21 2024

பாலிவுட்டில் ரெடியாகும் அடுத்த ஜவான்..? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அட்லீ

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

ஷாருக்கான் ஹீரோவாக நடித்த 'ஜவான்' திரைப்படத்திற்கு பாலிவுட்டில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதுவே அட்லீயின் முதலாவது பாலிவுட் படமாகவும் காணப்பட்டது.அத்துடன், இந்த படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடித்ததாக  சொல்லப்பட்டது. எனினும் அது நடக்கவில்லை.

இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் மாறும் நடிகர் ஷாருக்கான் இருவரையும் ஒரே படத்தில் இயக்குவேன் என அட்லீ கன்ஃபார்ம் செய்துள்ளார். 

மேலும், விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய அட்லீ, தளபதியின் குட்புக்கில் இடம் பிடித்துள்ளதோடு, அவருக்கு பாலிவுட்டில் ஷாருக்கானிடம் இருந்தும் அழைப்பு வந்தது. 


இதை தொடர்ந்தே, அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் ஜவான் உருவானது. இத்திரைப்படம் ஒட்டுமொத்தமாக இதுவரை 1100 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்துள்ளது.  

இவ்வாறான நிலையில், விஜய் - ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படத்தை விரைவில் இயக்குவேன் என அட்லீ கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஜவான் படப்பிடிப்பின் போதே, விஜய்யுடன் இணைந்து நடிக்க தயார் என ஷாருக்கான் கூறினார். அதேபோல் விஜய்ண்ணாவும் இதற்கு சம்மதம் சொல்லி விட்டார். அதனால் இருவருக்கும் ஏற்ற கதை எழுத ரெடியாகிவிட்டேன். அது எனது அடுத்த படமாக கூட இருக்கலாம் என கூறியுள்ளார்.

அதேவேளை,  விஜய்யும் ஷாருக்கானும் இணைந்தால் அந்தப் படம் வேற தரத்தில் ஹிட் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.




  

Advertisement

Advertisement