• Sep 20 2024

அல்டிமேட் ஸ்டாரின் வேற லெவல் மாஸ் காட்டும் லேட்டஸ்ட் போட்டோஸ்- ஷேர் செய்து வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத உச்சத்திலுள்ள நடிகர் அஜித்.இவரது நடிப்பில் தற்போது AK 61 திரைப்படம் உருவாகி வருகிறது.இப்படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகின்றார். இவர் வலிமை படத்தை இயக்கிய இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் சிறிய பூஜைகளுடன் தொடங்கியது. ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணாசாலை போன்ற இடத்தில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கி கொள்கை சம்பந்தப்பட்ட படம் என்று சொல்லப்படுகிறது.

இதுவரை நடந்த படப்பிடிப்பில் 65 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஐரோப்பா முழுவதும் மோட்டார் வாகனத்தில் கலக்கும் அஜித்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இப்போது அஜித் உணவகம் ஒன்றில் இருக்கும் புகைப்படங்களும் கார் அருகில் இருக்கும் மற்றொரு புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.அந்தவகையில் நடிகர் அஜித் விலை உயர்ந்த கார் MC Laren காரின் கதவைத் திறந்தபடி செம போஸ் கொடுத்துள்ளார். அந்த காரின் விலை சுமார் 4.7 கோடி வரை என கூறப்படுகிறது. இப்போது அவர் போஸ் கொடுத்து நிற்கும் போட்டோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

இதைப்பார்த்த ரசிகர்கள் வேற லெவல் அல்டிமேட் ஸ்டார் செம்ம மாஸா இருக்கிங்க என்று தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement