• May 05 2024

“அடிப்படை அறிவு கூட இல்லையா"… கோவம் கொண்ட நடிகை குஷ்புவின் இளைய மகள்-இது தான் காரணமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

வருஷம் 16 என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை குஷ்பு. இவர் 90S காலத்தில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்தார். இவர் தமிழ் சினிமா மட்டுமன்றி கன்னடம்,மலையாளம் மொழிகளில் நடித்தார்.

இவர் கார்த்திக், கமல்ஹாசன், பிரபு, ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இன்றைய தலைமுறை நடிகர்களுடன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவ்வாறு சினிமாவில் பிஸியாக வலம் வந்த நடிகை குஷ்பு கடந்த 2000ம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணத்திற்கு ஏராளமான சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் நேரில் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த குஷ்பு-சுந்தர்.சி தம்பதியினருக்கு அவந்திகா மற்றும் ஆனந்திகா என்ற இரு மகள்கள் உள்ளனர்.இந்நிலையில் குஷ்பூவின் இளைய மகள் அவந்திகா யூடியுப் தளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் நானும் என்னுடைய அக்கா இரண்டு பேருக்கும் சினிமா மீது மிகுந்த ஆர்வம் உள்ளது. அக்காவுக்கு நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம், எனக்கு தயாரிப்பில் தரப்பில் ஆர்வம் அதிகம்.இதனால் எங்கள் ஆசையை எங்கள் அம்மா அப்பாவிடம் கூறினோம். தங்கள் ஆசைக்கு இருவருமே தடை போடவில்லை.

இரண்டு பேருமே நாங்கள் சினிமாவில் வருவதற்கு முழு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் எங்களை பயன்படுத்தி நீங்கள் சினிமாவிற்கு வரக்கூடாது. உங்களின் சொந்த முயற்சி மற்றும் திறமையை பயன்படுத்தி வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள், என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவந்திகா, நான் என்னுடைய சிறு வயதில் உடல் எடை அதிகரித்து இருந்தேன் அதை ஒருபோதும் குறையாக என் வீட்டில் யாரும் சொன்னதில்லை. ஏனெனில் எங்கள் வீட்டில் அனைவருமே அப்படித்தான் இருப்பார்கள்.

ஆனால் சமூக வலைத்தள பக்கத்தில் ஒருவர் கேலி செய்தனர் என்னால் அவர்களின் பேச்சை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் நான் மன அழுத்தத்தில் இருந்தேன்.

இதையடுத்து உணவுக்கட்டுப்பாடு, தீவிர பயிற்சி செய்து மிகவும் கஷ்டப்பட்டு உடல் எடை குறைத்து இருக்கிறேன். இப்பொழுது உடல் எடை குறைப்பது பற்றி எதுவும் கூறாமல் பலர் என்னிடம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வீர்களா? என்று கேட்கிறார்கள் இதை கேட்கும் போது வருத்தமாக இருக்கிறது. 16 வயதில் எல்லாம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடியாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் கேட்கிறார்கள் என்று குஷ்புவின் இளைய மகள் அவந்திகா கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement