• May 05 2024

விஜய் சேதுபதியின் மாமனிதன் படம் செய்த வசூல் விபரம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் திரைப்பட நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் , சினிமாவை கலக்கி வரும் நடிகர் தான் நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

ஹீரோவாக தனி படத்தில் இருந்தாலும் சரி, மற்ற நடிகர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்றாலும் சரி எதையும் பார்க்காமல் தனது கதாபாத்திரம் நன்றாக இருக்கிறதா என்பதை மட்டுமே பார்த்து நடிப்பவர்.

மேலும் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து விஜய் சேதுபதி நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது. அப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்திலும் முக்கிய வேடம் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.

இப்போது விஜய் சேதுபதி, சீனு ராமசாமி அவர்களின் இயக்கத்தில் நடித்துள்ள மாமனிதன் என்ற படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

இப் படம் நேற்று ரிலீஸ் ஆன நிலையில் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 1 கோடி மேல் வசூலித்துள்ளதாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement