• May 10 2024

தனது காதல் மனைவிக்கு வாழ்த்து மழையினைப் பொழிந்த விக்னேஷ் சிவன்- இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் ஏழு ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் கடந்த 9- ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர். தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெரியளவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு இளம் ஜோடியாக இவர்கள் விளங்குகின்றார்.

திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் முதல் படமான o2 என்ற திரைப்படம் ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

இதற்குத் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவனும் தனது காதல் மனைவிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் "இந்த அற்புதமான த்ரில்லர் படத்திற்கு வாழ்த்துக்கள். எமோஷனல் வாழ்த்துக்கள் தங்கமே…" எனப் பதிவிட்டுள்ளார். அத்தோடு இவர் படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவனின் இந்தப் பதிவினைப் பார்த்த ரசிகர்கள் நயனிற்கு தங்கள் வாழ்த்து மழையினையும் பொழிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement