• Nov 11 2024

பிரேம்ஜிக்கு நச்சென இச்சு கொடுத்த இந்து..!! அப்படி என்ன விசேஷம் நடந்துச்சு தெரியுமா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் சிங்கிளாக காணப்பட்ட பிரேம்ஜிக்கு திருமணம் நடக்குமா? நடக்காதா? என் கேள்வி பலரிடமும் காணப்பட்டது. அத்துடன் இவர் கடைசி மட்டும் முரட்டு சிங்கிளாகத்தான் இருப்பார் என பிரேம்ஜின் ரசிகர்களும் நம்பி வந்தார்கள்.

ஆனாலும் திடீரென ஒரு நாள் பிரேம்ஜியின் அண்ணாவான வெங்கட் பிரபு, அவர்களுடைய திருமண பத்திரிகையை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்த இடத்திலிருந்து மணமக்களை வாழ்த்துங்கள் என அதிர்ச்சி கொடுத்து இருந்தார்.

அதன் பின்பு திருத்தணி முருகன் கோவிலில் இவர்களுடைய திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது. ஆனாலும் திருமண ரிசப்ஷன் சென்னையில் பலரும் வியக்கும் வகையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.


இதைத்தொடர்ந்து தனக்கு திருமணம் முடித்த சந்தோஷத்தில் தனது கையை  பிடித்த மனைவிக்காக எல்லா வேலைகளையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார் பிரேம்ஜி. அதன்படி அண்மையில் வீடு கூட்டுவது, சமைப்பது, உடுப்புகளை காய வைப்பது என அனைத்து வேலைகளையும் பார்த்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது பிரேம்ஜி - இந்து திருமணம் முடிந்து ஒரு மாத காலம் ஆகிவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட இந்து நச்சென பிரேம்ஜிக்கு கன்னத்தில் முத்தமும் கொடுத்துள்ளார். குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

இதை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு உங்களுடைய ரொமான்ஸ்களை ரூமுக்குள் வைக்குமாறு கமென்ட் பண்ணி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement