ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான அமரன் படம் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. மேஜர் முகுந்த் ஒரு ஐயங்கார். ஆனால் படத்தில் அதை காட்டவே இல்லை.
ஐயங்கார் ஆத்து பையன் தன் அப்பாவை நைனா என அழைக்க மாட்டார். அப்படி இருக்கும்போது அமரனில் சிவகார்த்திகேயன் தன் அப்பாவை நைனா என அழைத்திருக்கிறார். ஐயங்கார் எனும் அடையாளத்தையை மாற்றியிருக்கிறார்கள். ஐயங்காரான கமல் ஹாசனும் இதை கண்டுகொள்ளாதது ஏன்?.
இந்து ரெபக்கா வர்கீஸ் ஒரு கிறிஸ்தவர் என்பதை மட்டும் ஆழமாக பதிவு செய்திருக்கிறார்கள். வேண்டும் என்றே முகுந்தின் ஜாதியை திரித்துக் காட்டியிருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு பூணூல் போட்டுவிடாதது தான் உங்கள் பிரச்சனையா சார்?. பிராமணர் என்கிற ஜாதியை காட்டாதது ஒரு குற்றம் அல்லவே என தெரிவித்துள்ளனர்.
d_i_a
மேலும் சிலரோ, கமல் ஹாசனே ஒரு பிராமணராக இருந்து கொண்டு அமரன் படத்தில் மேஜர் முகுந்தின் அடையாளத்தை மறைத்திருப்பது வருத்தம் அளிக்கிறது. சூரரைப் போற்று படத்தில் கோபிநாத் ஒரு பிராமணர் என்பதை மறைத்தது போன்று அமரனிலும் நடந்திருக்கிறது. பயோபிக் எடுக்கத் தெரியவில்லை என்றால் எடுக்கக் கூடாது என்கிறார்கள் நெட்டிசன்கள்.
Listen News!