• Sep 20 2024

வசூல் மழையில் நிக்காமல் ஆட்டம் போடும் ஆண்டவர்-எல்லையில்லா சந்தோஷத்தில் படக்குழுவினர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் விக்ரம். இத்திரைப்படம் கடந்த ஜூன் 3இல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வசூலை தெறிக்கவிட்டு வருகின்றது. நல்ல விமர்சனங்களை பெற்று மாபெரும் வரவேற்பு பெற்று வருகின்றது.

இத்திரைப்படம் வெளியாகி 21 நாட்கள் கடந்த நிலையில் இன்று வரை வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. விஜய்சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம்,நரேன் முதலான பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். மற்றும் கெளரவ தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார்.

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம், இந்தி முதலான ஐந்து மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகியுள்ளது. திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸான நாள் முதல் 200 கோடியை எட்டி சாதனை படைத்தது. இன்னும் ஒரு வாரத்தில் இப்படம் தமிழகத்தில் மட்டும் 200 கோடி வசூலிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் படம் ரூ.380 கோடி வரை வசூல் சாதனை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement