• Jul 09 2025

8 ஆண்டுகளை கடந்த 'மரகத நாணயம்'... – கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் நகைச்சுவை மற்றும் திகில் கலந்த ‘மரகத நாணயம்’ திரைப்படம், 2025ம் ஆண்டில் தனது 8வது ஆண்டு நினைவாக ரசிகர்களிடம் மீண்டும் வரவேற்பை பெற்றுள்ளது. 2017ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான இத்திரைப்படம், ரசிகர்களின் மனதில் தனிப்பட்ட இடத்தை பிடித்திருந்த படமாக மாறியிருந்தது.


இந்த முக்கிய தருணத்தில், படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக சந்தித்து, கேக் வெட்டி, மகிழ்ச்சியுடன் கொண்டாடிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 2017ம் ஆண்டு திரைக்கு வந்த "மரகத நாணயம்" ஒரு நகைச்சுவைத் திகில் திரைப்படமாகும். 


இயக்கம் மற்றும் திரைக்கதை அனைத்தையும் ஏ.ஆர்.கே. சரவணன் மேற்கொண்டிருந்தார். இப்படத்தின் முக்கிய வெற்றிக்கு காரணமாக அவரது தனித்துவமான கதை சொல்லும் பாணி பார்க்கப்பட்டது. ஆதி, இப்படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணியும் இவர்களுடன் இணைந்து ஆனந்தராஜ், முனிஷ்காந்த், டேனியல் ஆன்னி போப், கோவை சரளா மற்றும் காளி வெங்கட் போன்றவர்களும் நடித்திருந்தனர். 


இந்த வெற்றிப் பயணத்தின் 8வது ஆண்டு நிறைவைக் குறிக்க, ஆதி, நிக்கி கல்ராணி, இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன், ஆனந்தராஜ் உள்ளிட்ட முக்கியமான குழுவினர் ஒன்று கூடினர். அவர்கள், கேக் வெட்டி சந்தோஷமாக செல்பி எடுத்துக்கொண்டு கடந்த கால நினைவுகளையும் தற்பொழுது பகிர்ந்து கொண்டனர்.

Advertisement

Advertisement