• Jan 27 2023

சீக்ரெட் அறைக்கு செல்லவிருக்கும் போட்டியாளர்-பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் வைல்ட்கார்ட் என்றி-வெளியானது சூப்பர் அப்டேட்..!

Listen News!
Aishu / 1 month ago
image

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது .அத்தோடு  டைட்டில் பட்டத்தை வெல்ல போட்டியாளர்கள் தற்போது தீவிரமாக விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த நிலையில் கடந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்ற குயின்ஸி வெளியேறினார் . இவ்வாறுஇருக்கையிலல் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கு பதிலாக ஒரு வைல்ட்கார்ட் போட்டியாளர் எண்ட்ரி ஆக உள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளது.

வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வரவிருக்கும் போட்டியாளர் லிப்ரா புரடொக்சன்ஸ் ரவீந்திரன் தயாரித்த படத்தில் நடித்ததாகவும் இவர் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் தெரியவரும் என்றும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் அடுத்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருக்கும் நிலையில் அசீம் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அவர் சீக்ரெட் அறையில் காத்திருக்கும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த வாரம் முதல் அதிக விறுவிறுப்பாக இருக்கும் என்று சொல்லப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement