சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசொட்டில், மலேசியா செல்வதற்காக முத்து வீட்டார்களுடன் பேசிக் கொண்டிருக்க, ரோகிணி என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றார். மேலும் இந்த விடயத்தில் விஜயா முத்துவுக்கு சப்போர்ட்டாக மலேசியா செல்லலாம் என உற்சாகத்தில் காணப்படுகின்றார்.
இதை தொடர்ந்து முத்து மொட்டை மாடியில் மீனாவுடன் சிஐடி வேலையை ஆரம்பிக்கின்றார். அதன்படி மலேசியா போவதாக சொன்னது பொய் என்றும் இதை தடுப்பதற்காக ரோகினி ஏதாவது கிரிமினல் வேலை செய்வார் என்றும் அதன் மூலம் அவரைப் பற்றி அறிந்து கொள்ளலாம் என்றும் மாஸ்டர் பிளான் போடுகின்றார்.
அதன்படி, ரூமுக்கு சென்ற ரோகிணி மனோஜிடம் எனது அப்பா ஜெயிலில் இருக்கும் போது எல்லாரும் போய் அவரை பார்ப்பது எனக்கு பிடிக்கல.. நீ எனக்கு சப்போர்ட்டா ஒன்றுமே கதைக்கல என்று அழுது புலம்புகின்றார்.
இதனை நம்பி மனோஜூம் விஜயாவிடம் யாரும் மலேசியாவுக்கு போக வேண்டாம் என்று சொல்கின்றார். ஆனாலும் அங்கிருந்த முத்துவும் மீனாவும் ரோகிணி அப்பாவை போய் பார்க்கவில்லை என்றால் தான் தப்பாக நினைப்பார்கள் என்று சொல்ல, விஜயாவும் ஆமாம் என்று கட்டாயம் நாங்கள் போகத்தான் வேண்டும் என்று சொல்லிச் செல்கின்றார்.
அடுத்து ஸ்ருதி டப்பிங் பேசும் போது, அதில் தனது கணவர் தன்னுடன் டைம் ஸ்பென்ட் பண்ணவில்லை என்று டிவோர்ஸ் கேட்டதாக ரவிக்கு அதிர்ச்சி கொடுக்கின்றார். அதன் பின்பு நாங்க ஒரு நாளைக்கு இரண்டு மூன்று மணி நேரம் தான் ஒன்றாக இருக்கிறோம் என்று கணக்கு போட்டு பார்க்கின்றார்.
இதைப்பற்றி ரோகிணியிடம் கேட்க, தாங்கள் ஒரு நாளைக்கு 9 மணிநேரம் ஒன்றாக இருப்பதாகவும், மீனா 10 மணித்தியாலம் இருப்பதாகவும் சொல்கின்றார். இதனால் நாங்கள் டைம் ஸ்பென்ட் பண்ணுவது குறைவு என்று பேசிக் கொண்டிருக்கும்போது நாங்களும் மலேசியா வருவதாக சொல்லுகின்றார் ஸ்ருதி. இது ரோகினிக்கு மேலும் அதிர்ச்சியை கொடுக்கின்றது.
இறுதியாக வித்யாவிடம் நடந்த அனைத்தையும் சொன்ன ரோகிணி, பிரவுன் மணியை கூப்பிடுமாறு சொல்லுகின்றார். அங்கு பிரவுன் மணி வந்ததும் தனக்கு உதவி பண்ணுமாறு கேட்க, அவர் முடியாது என்று சொல்லுகின்றார்.
எனினும் இறுதியாக இதை மட்டும் செய்து தருமாறு ரோகிணி சொல்லுகின்றார். இதனால் பிரவுன்மணியும் சம்மதித்து விட்டு செல்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!