• Jan 22 2025

இன்னும் இரண்டு நாள் தான்.? கோபியிடம் காசை நீட்டிய பாக்கியா.. ராதிகாவின் அதிரடி முடிவு

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் இல், பாக்கியா தனக்கு கிடைத்த திருமண ஆர்டரை நன்றாக செய்து முடித்து அனுப்பி வைக்கின்றார். இதன்போது கோபி உன்னுடைய ஸ்கில்ஸ், ஆளுமை எல்லாமே சூப்பர் என அவரை புகழ்ந்து தள்ளுகின்றார். அதற்கு பாக்கியா தேங்க்ஸ் சொல்லி செல்கின்றார்.

இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த ஈஸ்வரி அங்கு கிச்சனுக்கு ராதிகா வந்த போது பாக்யாவும் கோபியும் சேர்ந்து செய்த சமையல் பற்றியும் அவர்களுடைய பொருத்தம் பற்றியும் பேசிக் கொண்டிருக்கின்றார். மேலும் கோபிக்கு இப்போது பாக்யாவைத்தான் பிடித்திருக்கிறது. நீ விலகி சென்று விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று சொல்லுகிறார்.

அதற்கு ராதிகா உங்களுக்கு பஞ்சு போன்ற மருமகள் தான் வேணும், பாக்யா எல்லாத்தையும் பொறுத்துக் கொண்டிருப்பார். ஆனால் நான் அப்படி இருக்க மாட்டேன். முதலில் வயசுக்கு ஏற்ற மாதிரி பேசுங்கள். உங்களைப் போல தெருவுக்கு இரண்டு அம்மா இருந்தால் போதும் என ஈஸ்வரியை திட்டி விட்டுச் செல்கின்றார்.


அதன் பின்பு இந்த ஆர்டரில் நல்ல லாபம் கிடைத்திருப்பதாக பாக்கியா சொல்லி சந்தோஷப்படுகின்றார். மேலும் கோபியிடம் சென்று அவர் கிச்சனிலிருந்து எடுத்து தந்த ஆட்களுக்கான சம்பளத்தை கொடுக்கின்றார். முதலில் கோபி வேண்டாம் என்று சொல்லவும் ஈஸ்வரியும் சத்தம் போடுகின்றார். ஆனால் பாக்யா கோபியிடம் காசை கொடுத்துவிட்டு செல்கின்றார்.

மேலும் நீங்கள் பத்து நாள் இருப்பதற்கு தான் வாடகை தந்திர்கள். இன்னும் இரண்டு நாள் தான் இருக்கின்றது அதன் பின்பு வீட்டை காலி பண்ண வேண்டும் என்று சொல்ல,  அங்கிருந்து ஈஸ்வரி, இனியா எல்லாரும் பாக்யாவுக்கு திட்டுகிறார்கள்.

ஆனால் கோபி இன்னும் பத்து நாளைக்கு வாடகை தருவதாக சொல்ல, அங்கு வந்த ராதிகா அதற்கு அவசியம் இல்லை நாங்கள் இரண்டு நாட்களில் வீட்டை காலி பண்ணுகின்றோம் என்று சொல்லுகின்றார்.

இறுதியாக ஈஸ்வரியும் இனியாவும் கோபியை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்க, அங்கு வந்த கோபி தான் ராதிகாவிடம் பேசுவதாக சொல்கின்றார். அதன்படி ராதிகாவுடன் பேச தான் இங்கு தான் சந்தோஷமாக இருப்பதாக கோபி சொல்லுகின்றார். அதை கேட்டு ராதிகா அப்செட் ஆகிறார். இதான் இன்றைய எபிசோட். 

Advertisement

Advertisement