• Jan 15 2025

படங்கள் வெற்றிபெற வேண்டி திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த பிரபலம் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் அறிமுகமாகி தனக்காக ஓர் அங்கீகாரத்தை பெற்றவர் நடிகர் ரக்ஷன். பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறியப்பட்ட ரக்ஷன் 2020 ஆம் ஆண்டு இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் " படத்தில் நடிகராக அறிமுகமானார். 

Actor Rakshan

அறிமுகமான முதல் படத்திலேயே ஹீரோவின் நண்பனாக கதைமுழுதும் தொடரும் முக்கிய பாத்திரமொன்றில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்க்கப்பட்டார் நடிகர் ரக்ஷன்.முதல் படத்தின் வெற்றியே  ரக்ஷனுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை அள்ளி வழங்கியது.

Actor Rakshan

தற்போது ஹீரோவாக நடித்து வரும்  ரக்ஷன் அறுபடை வீடுகளில் ஒன்றான  திருச்செந்தூரில் இன்று குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்தார். தரிசனத்தின் பின்னர் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த  ரக்ஷன் “நான் இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்து வருவதோடு சூப்பர்ஸ்டாரின்  "வேட்டையன்" படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். அனைத்து படங்களும் வெற்றி பெற வேண்டி இன்று திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வந்தேன்” என குறிப்பிட்டிருந்தார்.


Advertisement

Advertisement