• Oct 16 2024

திடீரென காலில் விழுந்த கல்யாண மாப்பிள்ளை... பதறிப்போன நடிகை ராஷ்மிகா!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் கிர்க் பார்ட்டி என்ற படத்தின்மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். காந்தாரா படப்புகழ் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ராஷ்மிகாவிற்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்திருந்தது எனலாம்.

தொடர்ந்து அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா நடித்து வெளியான புஷ்பா படம் சர்வதேச அளவில் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று ராஷ்மிகாவிற்கு சிறப்பாக கைக்கொடுத்தது.


 கார்த்தியுடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் தமிழில் என்ட்ரியை கொடுத்திருந்தார் ராஷ்மிகா. தொடர்ந்து கடந்த மாதத்தில் வெளியான விஜய்யின் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்தப் படங்களின் வெற்றி இவரை இந்திய அளவில் பான் இந்தியா நாயகியாக மாற்றியுள்ளது. அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் கமிட்டாகி நடித்து வருகிறார் ராஷ்மிகா. தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக உள்ளார்.


இந்நிலையில், தனது உதவியாளர் சாய் பாபுவின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது அவர் மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தினார். அப்போது, ஓவராக மகிழ்ச்சி அடைந்த மாப்பிள்ளை பொத்துனு ராஷ்மிகாவின் காலில் விழுந்தார். மாப்பிள்ளை விழுந்ததால்,வேறு வழியில்லாமல் மணப்பெண்ணும் அவரது காலில் விழுந்தார்.

இதை சற்றும் எதிர்பாராத ராஷ்மிகா என்ன செய்வதென்று தெரியாமல் பதறி போனார். அட்சதை தூவி நல்லா இருங்க என்று மனதார வாழ்த்தினார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement