• May 13 2024

Bigg Boss-7 இல் களமிறங்கிய கவர்ச்சி நடிகை... அவரே வெளியிட்ட பதிவு... அடடே அப்போ இந்த சீசன் ஓஹோன்னு இருக்க போகுது..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிகளிலும் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 6சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 7-ஆவது சீசன் ஆரம்பமாக இருக்கின்றது.


மேலும் இம்முறை பிக்பாஸில் ஒரு வீடு அல்ல, இந்த முறை இரண்டு வீடுகள் எனவும், பிக்பாஸும் இரண்டு தான் எனவும் ஒரு தகவல் வெளிவந்தது. அதிலும் குறிப்பாக ஒருவர் பெண் பிக்பாஸ் எனவும் கூறப்படுகின்றது.  இந்த விடயமானது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மென்மெலும் தூண்டியுள்ளது.


இதனைத் தொடர்ந்து இந்த சீசனில் யார் எல்லாம் பங்கு கொள்ளப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் பலரும் ஆவலாக உள்ளனர். அந்தவகையில் ஒரு சில பிரபலங்களின் பெயர்ப்பட்டியல் ஏற்கெனவே இணையத்தில் கசிந்துள்ளது.

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-ஆவது சீசனானது தற்போது ஆரம்பமாகி இருக்கின்றது. இதில் பிரபல கவர்ச்சி நடிகையான கரணும் போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி இருக்கின்றார். இவர் ஏற்கெனவே கவர்ச்சிப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு பேர் போனவர் என்பது நமக்குத் தெரியும். அதுமட்டுமல்லாது கவர்ச்சிகரமான பதிவுகளின் மூலமாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் சர்ச்சையிலும் சிக்கி இருக்கின்றார்.


இதனையடுத்து பிக்பாஸ் 7இற்கு ரசிகர்களினுடைய ஆதரவினை வழங்குமாறு கூறி பதிவு ஒன்றினையும் இட்டுள்ளார். 


Advertisement

Advertisement

Advertisement