• Aug 26 2025

மதராஸி படத்தின் எதிர்பார்ப்பை உயர்த்திய ஆடியோ லான்ச்..!

luxshi / 1 hour ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான மதராஸி திரைப்படம், செப்டம்பர் 5ஆம் திகதி அனைத்து திரையரங்களிலும் வெளியாக உள்ளது. 


இந்நிலையில் மதராஸி திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

இசையமைப்பாளராக அனிருத் இணைந்துள்ள இப்படம், அவரும் சிவகார்த்திகேயனும் இணையும் எட்டாவது படம் என்பது  இன்னுமொரு சிறப்பு.


இந்நிலையில் மதராஸி படத்தின் முன்னோட்டமாக வெளியான “சலம்பலா” பாடல் ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் வரை அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

இதன் ஆடியோ லான்ச் நிகழ்வு ஆரம்பத்தில் நேரு ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 


ஆனால் எதிர்பார்த்த அளவில் டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை.  வெறும் 103 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

ஆனால் நேரு ஸ்டேடியம் பத்தாயிரம் சீட்டு வரை இருப்பதற்கான வசதிகள் இருப்பதாக கூறப்படுகிறது.


இதனையடுத்து குறைந்த டிக்கெட்டுகளை வைத்து நேரு ஸ்டேடியத்தில் வைத்தால் நன்றாக இருக்காது என்று முடிவு எடுத்த சிவகார்த்திகேயன் சட்டென்று நேரு ஸ்டேடியத்தில் இருந்து சாய்ராம் காலேஜுக்கு மாற்றி வைத்திருக்கிறார்.

ஏனென்றால் காலேஜில் வைத்தால் கல்லூரி மாணவர்கள் இருப்பார்கள் அதை வைத்து நாம் சமாளித்து விடலாம் என்று சிவகார்த்திகேயன் முடிவெடுத்ததாக மதராஸி திரைப்பட குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.


அந்த வகையில் எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் சிறந்த நயத்துடன் செயல்பட்டதோடு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றார். 

இதனிடையே தனது ரசிகர்கள் மற்றும் குடும்பங்கள் படத்தைக் காண்பதில் பெரும் உற்சாகம் காட்டியுள்ளனர். இதனால், “அமரன்” படத்தைத் தொடர்ந்து மதராஸி படமும் ஹிட் படமாக வலம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement