• Jan 15 2025

இணையத்தை அலறவிட்ட தளபதி ரசிகர்கள்.. கோட் ட்ரைலர் மொத்தமாக படைத்த சாதனை?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காணப்பட்ட கோட் படத்தின் டிரைலர் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

கோட் திரைப்படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியானது. அதில் இரண்டு பாடல்கள் விஜயின் குரலில் பாடப்பட்டுள்ளது. அதிலும் விஜய் - சினேகா காம்போவில் வெளியான மெல்லிசை பாடல் மட்டும்தான் ரசிகர்களால் அதிக கவனம் பெறப்பட்டது. ஏனைய இரண்டு பாடல்களுமே படு விமர்சனத்திற்கு உள்ளானது.

இதன் காரணத்தினாலே கோட் படத்தின் டிரைலர் என்ன ஆகுமோ என்ற அச்சம் எழுந்தது. ஆனாலும் அதை எல்லாம் தவிடுபொடி  ஆக்கும் விதமாக வெங்கட் பிரபு தரமான சம்பவத்தை செய்திருந்தார்.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியானது கோட் படத்தின் டிரைலர். விஜயின் 68வது திரைப்படமாக உருவாகியிருந்த திரைப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், லைலா, சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.


மேலும் இந்த படத்தில் மூத்த திரை நடிகரான மைக் மோகன் வில்லன் ஆக மிரட்டியுள்ளார். இவர் பழிவாங்கும் ஒரு கேரக்டரில் காணப்படுகின்றார். இதனை ட்ரைலர் மூலம் உறுதி செய்துள்ளார்கள். மேலும் அசத்தலான சண்டை காட்சிகளும் வெங்கட் பிரபுவுக்கே உரித்தான சில அட்டகாசமான விஷயங்களும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், கோட் படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில், இதன் வியூஸ் மட்டும் 20 மில்லியனை கடந்து விட்டதாக இதன் தயாரிப்பாளர் அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement