• Sep 20 2024

சிறகடிக்க ஆசை சீரியலில் இனி அடிதடி தானா? கையில் கட்டையுடன் ஷூட்டிங் வீடியோவை வெளியிட்ட நடிகர்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இதன் காரணத்தினாலேயே இந்த சீரியலை இல்லத்தரசிகள் முதல் இளம்வட்ட ரசிகர்கள் வரை விரும்பிப் பார்க்கின்றார்கள்.

கடந்த சில வாரங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் முதலாவது இடத்தை பெற்று வந்த சிறகடிக்க ஆசை சீரியல் திடீரென இந்த வாரம் ஏழாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. மீண்டும் இந்த இடத்தை சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலங்கள் பிடிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அனைவருக்குமே முக்கியத்துவம் கொடுத்து தான் இந்த சீரியலின் காட்சிகள் நகர்கின்றது. இதில் நடிக்கும் நடிகர்களை காணவில்லை என்று யாரும் சொல்ல முடியாத அளவிற்கு ஒவ்வொருவருக்கும் காட்சிகள் வழங்கப்பட்டு எல்லாரையும் மையப்படுத்தி இந்த சீரியல் காணப்படுகின்றது.

சிறகடிக்க ஆசை சீரியலின் முக்கிய கேரக்டரான முத்துவுக்கு நண்பராக நடித்தவர் தான் செல்வம். இவரது உண்மையான பெயர் பழனி அப்பன். இவர் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்.


இந்த நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அடுத்து இதுதான் நடக்கப் போகின்றதா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதில் செல்வம் வீட்டு வாசலில் யாருக்கோ அடிப்பதற்காக  மரக்கட்டையுடன் நிற்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் அப்படி என்றால் அடுத்த சீனில் அடிதடி இருக்குதோ என கமெண்ட் பண்ணி  வருகின்றார்கள்.

Advertisement

Advertisement