• Jan 19 2025

விஜய் போட்டியிடுவது இந்த இரண்டில் ஒன்று தான்.. ரசிகர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் பிறப்பித்த கட்டளை..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் போட்டியிட போகும் இரண்டு தொகுதிகளை தேர்வு செய்துவிட்ட நிலையில் அந்த தொகுதிகளில் இப்போது முதலே தீவிரமாக பணி செய்ய ரசிகர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் கட்டளை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகள் தங்கள் கட்சியை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியை ரசிகர்களிடம் ஒப்படைத்துள்ள விஜய், தான் போட்டியிடும் தொகுதியையும் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தூத்துக்குடி அல்லது நாகப்பட்டினம் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றில் விஜய் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஒருவேளை இரண்டிலும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக விஜய் தென் மாவட்டங்களில் தான் மிகுந்த கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது.



விஜய்யின் முதல் அரசியல் கட்சி மாநாடு நெல்லை அல்லது தூத்துக்குடியில் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் முதல் மாநாட்டில் விஜய்யின் கட்சி, கொடி மற்றும் நிர்வாகிகள் அறிவிப்பு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் தென் மாவட்டத்தில் தான் உள்ளனர் என்பதால் திருச்சி, திண்டுக்கல், மதுரை, மற்றும் நெல்லை, குமரி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் தீவிர கவனம் செலுத்துமாறும் தென்மாவட்டம் முழுவதுமே தமிழக வெற்றி கழகத்தின் கட்டுப்பாட்டில் வரவேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் கட்டளை இட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

வட மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் ஒரு பக்கமும், பாட்டாளி மக்கள் கட்சிகள் இன்னொரு பக்கம் வலிமையாக இருப்பதால் தென் மாவட்டங்களை முழுமையாக கட்டுப்படுத்தி விட்டால் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்பது தான் விஜய்யின் திட்டமாக உள்ளதாகவும் விஜய் , புஸ்ஸி ஆனந்த் உள்பட முக்கிய நிர்வாகிகள் தென் மாவட்டத்தில் தான் போட்டியிட போவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement