• Apr 26 2024

துணிவு ட்ரெய்லர் வந்தாச்சு- வாரிசு ட்ரெய்லர் ரிலீஸ் திகதி என்ன தெரியுமா?- சூப்பராக வந்த அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரைப்பட இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. ரூ. 80 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் வில்லனாக நடித்துள்ளார். இவரை தவிர ஷ்யாம், சரத்குமார், குஷ்பு, சம்யுக்தா என ஏகப்பட்ட  நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

கடந்த டிசம்பர் 24ம் தேதி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது,அத்தோடு இப்படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.அதற்கான ப்ரமோஷன் பணிகளில்  படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் இத்திரைப்படம் 11ம் தேதி வெளியாகும் என ராஷ்மிகா மந்தனா தெரிவித்திருந்தார். தற்போது என்ன விவரம் என்றால் இப்படத்தின் டரெய்லர் வரும் ஜனவரி 2ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.

மேலும் இத்திரைப்படம் குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருப்பதால் ரசிகர்களும் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement