புதிய திரைப்படங்கள் வெளியான முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் புதிய படங்கள் பதிவாகி வருவது பெரும் சர்ச்சை ஆகியிருந்த நிலையில் தற்போது தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் மதுரையில் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
கோடி கணக்கில் செலவு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு படத்தை ரிலீஸ் செய்யும் நிலையில் அந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், தங்கள் தளத்தில் புதிய படங்களை வெளியிட்டு வருகின்றன. இதனால் தியேட்டர்களில் பெருமளவு வசூல் பாதிப்பதாகவும் ஏராளமானோர் இலவசமாக இணைய தளங்களில் பார்த்து விடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
திரையுலகினர் மற்றும் காவல் துறையினர் சைபர் கிரைம் அதிகாரிகள் பலமுறை முயற்சித்தும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் உரிமையாளர் மற்றும் அட்மின்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் புதிய திரைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்டீபன் ராஜ் என்பவரை கேரள சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை செய்ததில் ஒரு படத்திற்கு ரூ.5000 கமிஷன் பெற்று இணையதளத்தில் புதிய திரைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் தியேட்டருக்கு சென்று புதிய படங்களின் முதல் நாள் காட்சியிலேயே சிறிய கேமரா வைத்து வீடியோ எடுத்துள்ளார் என்றும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புதிய படங்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தமிழ் ராக்கர்ஸ், புதிய திரைப்படங்கள், அட்மின்,
Listen News!