• May 20 2024

சூர்யா-ஜோதிகாவின் மகள் தியா செய்த செயல்….வைரலாகும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடிகளாக வலம் வருபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா. இவர்கள் இருவரும் காதலிக்கும் போது எவ்வளவு சந்தோஷமாக இருந்தார்களோ அதே சந்தோஷத்தில் தான் திருமணத்திற்கு பின்பும் இருக்கின்றார்கள்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்களில் எல்லாம் இணை பிரியாத காதலர்களாக இருந்துள்ளனர். அப்போதிலிருந்தே இவர்கள் இருவரும் நிஜத்திலும் இணைய வேண்டும் என ரசிகர்கள் நினைத்திருந்தார்கள்.

இந்நிலையில் இவர்களும் காதலித்து பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்திருந்தார்கள். திருமணத்திற்கு பின்னரும் இவர்கள் கியூட் ஆன ஜோடிகளாகவே வலம் வருகின்றார்கள். இவர்களுக்கு தற்போது ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

சமீபத்தில் இவர்களின் மகள் தியா பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்தமையினால் அவரது ரிசல்ட் சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி இருந்தது.

இந்த சந்தோஷத்தைக் கொண்டாடும் விதமாக நடிகர் சூர்யா தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் சுற்றுலா சென்றுள்ளார். அந்த சுற்றுலாவில் எடுக்கப்பட்ட வீடியோ, போட்டோக்களை அவரது மகள் தியா எடிட் செய்துள்ளார்.

தியா எடிட் செய்த அந்த வீடியோவை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி இருக்கின்றார். இந்நிலையில் இப்பதிவு அவரது ரசிகர்களால் சமூக வலைத்தளங்களினூடாக அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement