• Apr 16 2026

சூப்பர் ஹீரோ படத்தில் சூர்யா! புதிய இயக்குநருடன் கூட்டணி! வைரலாகும் அப்டேட்..

shali / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் சூர்யா கடைசியாக கங்குவா திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இயக்குநர் பசில் ஜோசபுடன் அடுத்த படத்தில் கமிட்டாகி இருப்பதாக தங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து பார்ப்போம்.


சூர்யா கார்த்திக் சுப்புராஜின் ரெட்ரோ, ஆர்.ஜே பாலாஜின் சூர்யா 45, வெற்றிமாறனின் வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் நடிகர் சூர்யா, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரும்புக்கை மாயாவி எனும் சூப்பர் ஹீரோ படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அதில் அவர் நடிக்கவில்லை என்ற அறிவிப்பு வெளியானது. இதனை அடுத்து இன்னுமொரு அறிவிப்பு இணையத்தில் வலம் வருகிறது. 


இந்நிலையில் நடிகர் சூர்யா நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் மின்னல் முரளி என்ற படத்தை இயக்கிய இயக்குநர் பசில் ஜோசப்புடன் அடுத்த படத்தில்  நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. இயக்குநர் பசில் தற்போது ரன்வீர் சிங் நடிப்பில் சக்திமான் திரைப்படத்தை இயக்கி வருகிறார் அந்த திரைப்படம் முடிய சூர்யா திரைப்படத்தினை இயக்க இருக்கிறார்.இந்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement