• Sep 20 2024

அருண் விஜய்யின் ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் தான் நடித்த சில படங்களின் மூலம் பிரபல்யமானவர் நடிகர் அருண் விஜய்.

இவருடைய சினிமாப்பயணத்தின் ஆரம்பத்தில் இவர் நடித்த பல படங்கள் தோல்வியைக் கொடுத்தாலும் தற்பொழுது இவர் நடித்து வரும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருகின்றது.

இவர் நடிப்பில் இயக்குனர் அறிவழகன் இயக்கி வரும் திரைப்படம் “பார்டர்”. இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். 

குற்றம் 23 படத்தை தொடர்ந்து அருண் விஜய் – அறிவழகன் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகும் படம் இந்த “பார்டர்”. மேலும் இதில் அருண் விஜய் ராணுவ வீரராக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் தயாராகி பல மாதங்கள் ஆன நிலையில் கொரோனா மற்றும் வேறு சில காரணங்களால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

இந்நிலையில் அருண் விஜய்யின் சினம் திரைப்படம் செப்டம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.எனினும்  இதையடுத்து அக்டோபர் 5 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வருடத்தில் 5 படங்கள் அருண் விஜய் நடிப்பில் வெளியாக உள்ளன.

Advertisement

Advertisement