• Apr 28 2024

'நானே வருவேன்’ பர்ஸ்ட் சிங்கிள் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.இந்த திரைப்படத்தில், தனுஷுடன் நித்யா மேனன், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ், ராஷி கன்னா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.அத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில், நானே வருவேன் திரைப்படத்தை தனுஷின் அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன் இயக்கி வருகிறார். 



இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும், இந்த படத்தில் தனுசுடன் நடிகை இந்துஜா  நடிக்கிறார். மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளார். 

அந்த வகையில், சமீபத்தில் நானே வருவேன் படத்தின் போஸ்டர்கள் சிலவற்றை படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டிருந்தது. அந்த போஸ்டரில், "விரைவில் திரை அரங்குகளில்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.



இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளன



மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் வரும் 7ஆம் தேதி வெளியாகும் என கலைபுலி எஸ் தாணு அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அத்தோடு ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இந்த படம் திருச்சிற்றம்பலம் படத்தை அடுத்து மேலும் ஒரு வெற்றி படமாக தனுஷூக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement