• Sep 20 2024

பட்டப்பகலில் இப்படியொரு சம்பவமா... டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதருக்கு நடந்தது என்ன..?அவரே வெளியிட்ட வீடியோ

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது டான்ஸ் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் ஸ்ரீதர்.இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடன கலைஞராக பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் சென்னை தியாகராயர் நகரிலுள்ள பாரத் பெட்ரோல் பங்கிற்கு தனது காரில் அவர் சென்று இருக்கிறார்.

அப்போது காருக்கு காத்து அடித்துக் கொண்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவர் அவரது கார் டயரிலுள்ள பொருளை எடுத்து மாற்று பொருளை வைத்தபோது அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். மேலும் இது நடந்ததை விளக்கி அவர் வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'நான் உங்க ஸ்ரீதர் மாஸ்டர் பேசுகிறேன். நான் இங்கு பாரத் பெட்ரோல் பங்கில் இருக்கிறேன். என் ஜிடி பி.எம்.டபிள்யு காருக்கு காற்று அடிக்க வந்தேன். மேலும் அங்கு 2 இந்திகாரர்கள் காற்று அடித்தார்கள். அப்போது காற்று அடிக்கும் இயந்திரத்தில் ஒரு இடத்தில் ஊழியர் கை வைத்துக்கொண்டே இருந்தார். எதற்க்கு அப்படி வைத்தார்கள் என்று தெரியவில்லை. நான் அதை பார்த்து திறக்க சொன்னேன்.' என்று சொல்லி திறந்து காட்டினார்.



அப்போது அதற்குள் பல கார்களில் இருந்து ஏராளமான உதிரி பாகங்கள் கழற்றி உள்ளன. இதை வீடியோவில் காட்டிய டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் தனது பேச்சை மீண்டும் தொடர்ந்தார். 'அதாவது ஒவ்வொரு பி.எம்.ட்பிள்யு போன்ற விலை உயர்ந்த கார்களின் உதிரி பாகங்கள் ரூ.500 முதல் ரூ.1000 வரை இருக்கும். இதுகூட பராவாயில்லை. ஆனால், இதை போலியாக மாற்றுகிறார்கள்.

நமது காற்று இது. இவ்வாறு செய்வது மிக மிக தவறான விடயம்.மேலும்  இது அனைவருக்கும் போய் சேர வேண்டும். இது எனக்காக மட்டும் இல்லை. நான் இந்த இடத்திற்கு இப்படியே காரில் வரவில்லை. சைக்கிளில் தான் வந்தேன். சிறிய சிறிய விசயமாக இருந்தாலும் கஷ்டப்பட்டே எல்லோரும் சம்பாதிக்கிறார்கள். தவறாக விசயத்தை விடக்கூடாது.



எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் காத்து அடிக்கும்போது இறங்கி என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். அத்தோடு திரும்பவும் அதை வைக்கிறார்களா என்று பாருங்கள். 4 டயர்களிலும் அது இல்லை என்றால் கார் ஷோரும்களுக்குபோய் அதன் விலை என்னவென்று கேளுங்க. இந்த பாகங்கள் எங்கு போகிறது என்றும் தெரியும்.





Advertisement

Advertisement