நடிகர் வடிவேலுவிற்கு இப்படியொரு அழகான பெண்ணா… வைரலாகும் புகைப்படம்..!

என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் வடிவேலு. தமிழ் திரைப்படத்துறையில் “வைகைப் புயல்” என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள் தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகராக வலம் வருகின்றார்.

நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர். இவரது நடிப்பில் வெளியாகிய ஃப்ரண்ட்ஸ், சச்சின் சந்திரமுகி திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களால் பேசப்படும் படங்களாகவே இருக்கின்றன.

இவ்வாறு சினிமாவில் வேற லெவலில் ரீச்சாகி வந்த நடிகர் வடிவேலு இயக்குநர் ஒருவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பல வருடங்கள் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். இதனால் ரசிகர்கள் அனைவரும் சோகத்துக்குள்ளாகினார்கள். இப்போது வரையிலும் அவரது காமெடிகள் தான் மீம்ஸ்களாக அதிகம் பயன்படுகின்றது.

அந்த வகையில் தற்பொழுது ரி என்ட் ரி கொடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் தற்போது நாய் சேகர் returns மற்றும் மாமன்னன் ஆகிய இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் நாய் சேகர் returns படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் வடிவேலு.

பல ஆண்டுகள் கழித்து வடிவேலுவின் நடிப்பில் உருவாகி வரும் இந்த இரு படங்களையும் திரையில் காண வடிவேலுவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு இருக்கையில் நடிகர் வடிவேலுவுக்கு சுப்பிரமணி, கார்த்திகா என இரு பிள்ளைகள் உள்ளனர்.இதில் வடிவேலுவின் ஒரே மகள் தான் கார்த்திகா. இவருடைய திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதோ அந்த புகைப்படம்..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்