கர்ப்பகால போட்டோ சூட் நடத்திய தொகுப்பாளினி தியா; குவியும் லைக்ஸ்..!

ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்தவர் தியா மேனன். முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான ‘சன் டிவி’-யில் 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான காமெடி கேம் ஷோ தான் ‘சூப்பர் சேலஞ்ச்’. இந்த ‘சூப்பர் சேலஞ்ச்’ கேம் ஷோவை தொகுத்து வழங்கியவர் தான் தியா மேனன் .

இதனைத் தொடர்ந்து இவர் சன் டிவிலேயே ஒளிபரப்பான இன்னொரு கேம் ஷோ ‘சவாலே சமாளி’ போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.எனினும் இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் பாடல் நடனம் என்று பன்முக திறமை கொண்டவர் தியா. விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்ற ‘என் ஜன்னல் வந்த காற்றே’, மற்றும் வில்லு படத்தில் இடம்பெற்ற ‘தீம்தனக்கா தில்லானா ’போன்ற சில பாடல்களை பாடி இருக்கிறார்.

இதன் பின் 2016-ஆம் ஆண்டு கார்த்திக் என்ற கிரிக்கெட் வீரரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தொகுப்பாளினி தியா மேனன். திருமணத்திற்கு பின்னர் இவர் சிங்கப்பூரில் செட்டில் ஆகினார். திருமணத்திற்கு பின்னர் டிவி பக்கம் வரமால் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டார் தியா.

இருப்பினும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் தியா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இப்படி ஒரு நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மற்ற பிரபலங்கள் போலவே இவரும் கர்ப்பகால புகைப்படங்கள் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது சமூக வலை பக்கத்தில் பகிர்ந்துள்ள தியாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்