அட நம்ம சத்யராஜ்ஜா இது..? சிறுவயதில் இப்படி இருந்திருக்காரே…வெளியான புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் கதாநாயகனாக நடித்து பல மக்கள் மனங்களை வென்றவரே நடிகர் சத்யராஜ். இவர் திரையுலகில் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் திறம்பட நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பினாலே மக்களை அசர வைப்பார்.

சினிமாத் துறையில் வில்லனாக தனது பயணத்தை தொடங்கிய இவர் காலப்போக்கில் முன்னணி ஹீரோவாகவும் உயர்ந்தார். இவர் நடித்த படங்களோ ஏராளம். அதில் ‘ரிக்சா மாமா, மாமன் மகள், நடிகன், ஜல்லிக்கட்டு, வால்டர் வெற்றிவேல்’ எனத் தொடர்ந்து பல திரைப்படங்கள் திரையங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்திருக்கின்றன. ஹீரோ,வில்லன் என அசத்தி வந்த இவர் தற்போது துணைக் கதாபாத்திரங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார்.

அதிலும் குறிப்பாக இவர் ‘பாகுபலி’ படத்தில் நடித்திருந்தமையை யாராலும் மறக்க முடியாது. அதாவது மாபெரும் வெற்றியடைந்த ‘பாகுபலி’ திரைப்படத்தில் கட்டப்பா எனும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து நம் மனதில் இருந்து என்றுமே நீங்காத அளவிற்கு இடத்தை பிடித்துவிட்டார். அதுமட்டுமல்லாது தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பிரின்ஸ்’ என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார்.

இவ்வாறாக பல ஆண்டுகளாக நடிப்பில் கொடி கட்டிப் பறந்து வரும் நடிகர் சத்யராஜின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. ஏற்கனவே பல நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிய நிலையில் தற்போது இவரின் புகைப்படமும் ரசிகர்களால் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்