• Jul 27 2024

மனிதக்கடவுள் லாரன்ஸ்கே இலவசமாக சாப்பாடு கொடுத்த பிரபல செஃப்! வைரலாகும் வீடியோ!

Nithushan / 2 months ago

Advertisement

Listen News!

 ஒரு சில நடிகர்கள் மாத்திரமே தாங்கள்  உழைக்கும் பணத்தை அவர்கள் மட்டும் வைத்திருக்கலாம் அதை வைத்து பல ஏழை மக்களுக்கு உதவி செய்கின்றனர். அவ்வாறு சமீபத்தில் மனித கடவுள் என போற்றப்படும் ராகவா லாரன்ஸ் செய்த செயல் பாராட்டை பெற்று வருகின்றது.


நடன கலைஞரும் , இயக்குனரும் , நடிகரும் என அனைத்து பரிமாணங்களிலும் கலக்க கூடியவர் ராகவா லாரன்ஸ் ஆவார். இவர் பொதுவாகவே ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றார். அவ்வாறே சமீபத்தில் மாற்றம் எனும் அறக்கட்டளையை தொடங்கியுள்ளார்.


 இந்த அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர் வழங்கி வருகின்றார். இதன் போது இவர்களோடு சேர்ந்து  சேவை செய்பவர்களுக்கும் , ராகவா லாரன்சுக்கும் இலவசமாக உணவு சமைத்து வழங்குகிறார் செஃப் வினோத்குமார். இதனை வீடியோவாக வெளியிட்டு பாராட்டியுள்ளார் லாரன்ஸ் மாஸ்டர். 


Advertisement

Advertisement