புதிதாகப் பெண் வாங்கிய விஜே விஷால்…அதுவும் ரெட் கலரிலேயா…? வாழ்த்துத் தெரிவிக்கும் ரசிகர்கள்..!

சினிமா நட்சத்திரங்கள் எப்படி மக்கள் மத்தியில் பிரபலமாகின்றார்களோ அந்தளவிற்கு சீரியல் நட்சத்திரங்களும் எளிதில் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுவார்கள். அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. அவ்வாறாக இந்த சேனலில் ஒளிபரப்பாகும் மக்கள் மனங்கவர்ந்த சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’.

இந்த சீரியலில் எழில் கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவரே விஜே விஷால். இவர் ஏற்கெனவே பலருக்கும் அறிமுகமான முகமாக இருப்பினும் தனது திறமையினால் விஜேவாக இருந்து தற்போது ஹீரோவாக மாறி இருக்கிறார். இந்த சீரீயலில் நடிப்பதற்கு முன்னர் விஷால் முதன் முதலாக விஜய் டீவியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் 1’ என்ற நிகழ்ச்சியில்தான் கலந்துகொண்டர்.

அதனைத் தொடர்ந்து ‘கல்யாணமாம் கல்யாணம்’ என்ற சீரியலில் நடித்தார். அந்த சீரியலில் இவருடைய கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்படக்கூடிய அளவிற்கு இருந்ததில்லை. இதனால் அதனைத் தொடர்ந்து ‘அரண்மனைக்கிளி’ என்ற சீரியலில் நடித்துள்ளார்.

இவ்வாறாக பல சீரியல்களில் இவர் நடித்திருந்தாலும் இவருக்கான பேரையும், புகழையும் அவை எதுவும் பெற்றுக் கொடுக்கவில்லை. இதற்கான காரணம் அந்த சீரியல்களில் எல்லாம் அவர் சின்ன ரோலில் நடித்துக் கொண்டிருந்தமையே ஆகும்.

இவற்றைத் தொடர்ந்து இவர் நடித்த ‘பாக்கியலட்சுமி’ என்ற சீரியலே இவர் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்த சீரியலில் கதாநாயகனாக இவர் நடித்துக் கொண்டிருந்தாலும் பல பெண்களின் மனதை கவர்ந்த கேரக்டராக இருந்து வருகிறார்.

இவ்வாறாக தனது நடிப்புத் திறமையை பல விதமாகவும் வெளிப்படுத்தி வருகின்ற விஷ்ணு விஷால் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகின்ற ஒருவர். அந்த வகையில் இவர் தற்போது பதிவிட்டிருக்கின்ற இன்ஸ்டா பதிவானது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி இருக்கின்றது.

அதாவது விஜே விஷால் சிவப்பு நிறத்தில் புதிதாகக் கார் ஒன்றினை வாங்கியிருக்கின்றார். அக்காருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருப்பதோடு அக்காரினை ‘புதுப்பெண்’ என வர்ணித்திருக்கின்றார். அதில் “வெல்கம் டு ஹோம் ரெட் லேடி” எனப் பதிவிட்டு அதனை அனைவரினதும் ஆசீர்வாதத்துடன் வீட்டிற்கு வரவேற்பதாகவும் கூறியிருக்கின்றார்.

ஏற்கெனவே பிக்பாஸ் பாலாஜி புது கார் வாங்கி அதனை ‘மாடு’ எனக் கூறிப் பதிவிட்டிருந்தார். அது எவ்வாறு சமூக வலைத்தளங்களில் வைரலானதோ அதே போன்று விஜே விஷால் ‘ரெட் லேடி’ எனக் குறிப்பிட்ட விஷயமும் ரசிகர்கள் பலரை கவர்ந்திருக்கின்றது. அதனால் இப்பதிவினை அதிகளவில் பகிர்ந்து வருவதோடு தமது கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்