• May 20 2024

ரிலீசுக்கு முன்பே கேக் வெட்டி கொண்டாடும் நயன்! வைரலாகும் செலிபிரேசன் போட்டோஸ்!

Nithushan / 1 week ago

Advertisement

Listen News!

2005 ஆம் ஆண்டு ஹரியின் இயக்கத்தில் வெளியான அய்யா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமாகி தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னிலை கதாநாயகர்களுடன் நடித்து தனக்கென பெரும் இரசிகர் பட்டாளத்தை சொந்தமாக்கி  இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நயன்தாரா.தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.


தற்போது பீமேல் லீடு கதைகளுக்கு முன்னுரிமை கொடுத்து  அவ்வறான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் நயன்தாரா  யூடியூப் சேனல் புகழ் ட்யூட் விக்கி இயக்கும் 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' எனும் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் நயன்தாராவுடன் ஜோகி பாபு,தேவதர்ஷினி , கௌரி கிஷன் ஆகிய முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கின்றனர்.


இந்நிலையில்   'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வ செய்தியை வெளியிட்டுள்ளது.படப்பிடிப்பு முடிவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர் .இச் செய்தியறிந்த இரசிகர்கள் திரைப்பட வெளியீட்டிக்காக பெரும் எதிர்பார்ப்புகளுடன் குறித்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.    

Advertisement

Advertisement