தற்கொலைக்கு முயன்ற தீபிகா படுகோன்… இவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

இந்தியத் திரையுலகில் தமிழ், ஹிந்தி, கன்னடம் எனப் பல மொழிகளிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவரே நடிகை தீபிகா படுகோன். இவர் ரசிகர்கள் பலரின் கனவு நாயகியாக மாட்டுமன்றி கனவு நாயகியாகவும் வலம் வருகின்றார். அதுமட்டுமன்றி பாலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் இவர் இருக்கின்றார்.

இவர் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்ட பிறகும் சினிமாவை விட்டு விலகாமல் தொடர்ந்து பாலிவுட் படங்கள் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தீபிகா படுகோன் தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் அதனை கண்டறிந்து, அந்த இக்கட்டான சூழலில் இருந்து வெளியே வர என்ன செய்தார் என்பது தொடர்பாக சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மனம் திறந்து பேசியிருக்கின்றார்.

இது தொடர்பாக இவர் கூறுகையில் “நான் என்னுடைய துறையில் உயர்ந்த நிலையில் இருந்தேன், எல்லாமே சரியாக தான் நடந்து கொண்டிருந்தது, அதனால் நான் வெறுமையாக உணர்தேன். நான் அப்படி உணர்ந்ததற்கு எந்தக் காரணமும் இல்லை. வெளிப்படையான காரணமும் இல்லை, ஆனால் நான் எந்த காரணமும் இன்றி பல சமயங்களில் நின்மதி இல்லாமல் போவேன்.

அப்போதெல்லாம் தூக்கத்தில் இருந்து எழுவதற்கு நான் விரும்பியது இல்லை. அந்தத் தூக்கம் தான் என்னைத் தப்பிக்க வைக்கும் வழியாக உணர்வேன். சில சமயங்களில் நான் தற்கொலை செய்து கொள்ள கூட முயன்றுள்ளேன்” எனக் கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியினைக் கொடுத்திருக்கின்றார்.

மேலும் அவர் அந்த கடினமான காலங்களில் தனது அன்புக்குரியவர்கள் எவ்வாறு தன்னைக் காப்பாற்றினார்கள் என்பதைப் பற்றி அந்த மேடையில் பேசியிருந்தார். தொடர்ந்து தீபிகா பேசுகையில் “எனது பெற்றோர் பெங்களூரில் வசிக்கிறார்கள், அவர்கள் என்னைச் சந்திக்க வரும் ஒவ்வொரு முறையும் நான் நன்றாக இருக்கிறேன் என்பதை மட்டுமே காட்டிக் கொள்ள விரும்பினேன்.

அவர்களை பார்க்கும் போதெல்லாம், எல்லாப் பிரச்சினைகளும் சரியாகிவிட்டது போல, நான் எப்போதும் தைரியமாக முன்னோக்கிச் செல்வேன். அவர்கள் மீண்டும் பெங்களூருக்கு சென்றதும் நான் சோர்ந்து விடுவேன்” எனக் கூறியிருக்கின்றார்.

மேலும் “இதுகுறித்து முதலில் என்னிடம் கேள்விகளை கேட்டது என்னுடைய அம்மா தான். என் அம்மா என்னிடம் வழக்கமான சுகாதாரக் கேள்விகளை கேட்டார். அப்போது அவர் கேட்ட எந்த கேள்விகளுக்கும் என்னிடம் பதில் இருக்கவில்லை. காரணம் எந்த ஒரு பிரச்சினையும் எனக்கு இல்லை. ஆனால் வெறுமையாகவே உணர்ந்தேன். என்னுடைய பிரச்சினையை அறிந்து எனக்கு என் அம்மா தான் உதவினார் அப்போது அவரை அந்த கடவுளே அனுப்பியதாகவே உணர்ந்தேன்” என கூறியுள்ளார்.

தீபிகா படுகோன் இவ்வாறான ஒரு மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தாகவும் அதன் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளதாகக் கூறியதும் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்