• Jul 27 2024

விடாமுயற்சிக்கு ஸ்பீட் பிரேக்..?? ரோட்டுல கிளாஸ்.. காட்டுல ஸ்னூக்கர் கேம்! அஜித்தின் ட்ரிப் போட்டோஸ்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அஜித் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் விளையாட்டு வீரராகவும், கார், பைக் ரேஸ் ஓடுவதில் அதிக ஆர்வம் உடைய நபராகவும் காணப்படுகிறார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில், விடா முயற்சி படத்தில் நடித்து வரும் அஜித்தின் படப்பிடிப்பு அண்மையில் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணத்தினால் அந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் இயக்குனர் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த படத்தின் டைட்டில் வெளியானது. குட் பேட் அக்லி என்று பெயரிடப்பட்ட அந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாக உள்ளது.


கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு தான் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அஜித், சிறிது காலம் ரெஸ்ட் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது பைக் டீம் உடன் டூர் கிளம்பிவிட்டார். '

இவ்வாறு அஜித் மீண்டும் தனது பைக் பயணத்தை மத்திய பிரதேசத்தில் தனது சிறிய பைக்கில் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், தற்போது நடிகர் அஜித்குமாரின் மற்றும் ஒரு பைக் டூர் பற்றிய புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் காடு போன்ற இடத்தில் தனது குழுவினருடன் அடுப்பில் சமைத்து சாப்பிட்டு,  ஸ்னூக்கர் கேம் விளையாடும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதேவேளை, அஜித் தனது பைக் பயணத்தை முடித்துவிட்டு மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement