• Nov 11 2024

கேன்ஸ் திரைப்பட விழாவில் தென்னிந்திய திரைப்பட குழு ,இந்திய திரையுலகம் பெருமிதம் !

Nithushan / 5 months ago

Advertisement

Listen News!

கேன்ஸ்  திரைப்பட விழா  என்பது பிரான்சு, கான் நகரில் ஆண்டு தோறும் நடைபெறும் ஒரு பன்னாட்டுத் திரைப்பட விழாவாகும். 1946 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உலகின் மிகப் பழையதும், உலக அளவில் மிகுந்த செல்வாக்கும் மதிப்பும் கொண்ட ஒரு நிகழ்வும் ஆகும். இவ்விழாவில் உலகளாவிய ரீதியில், ஆவணத் திரைப்படங்கள் உட்பட அனைத்து வகைத் திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.


அழைப்பிதழ் பெற்றோர் மட்டுமே பங்குகொள்ளும் இவ்விழா ஆண்டுதோறும் மே மாதமளவில் நடைபெறுகின்றது. இந்த ஆண்டுக்கான கேன்ஸ்  திரைப்பட விழா இந்த மாதம் 14 ஆம் திகதி தொடங்கி 25ஆம் திகதி நிறைவடைகிறது.இந்நிலையில் முகேஷ் குமார் சிங் இயக்கியவரவிருக்கும் கண்ணப்பா திரைப்படக் குழுவிற்கு  கேன்ஸ்  திரைப்பட விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பு  விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மோகன் பாபுவின்  ஏவிஏ என்டர்டெயின்மென்ட் மற்றும் 24 பிரேம்ஸ் ஃபேக்டரி தயாரிப்பில் முகேஷ் குமார் சிங் இயக்கும் இப்படத்தில்  விஷ்ணு மஞ்சு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.படத்திற்கான ஆக்ஷன் காட்சிகளை ஸ்டண்ட் இயக்குனர் கெச்சா கம்பக்டீ வடிவமைக்க, நடன காட்சிகளை மாஸ்ட்ரோ பிரபுதேவா வடிவமைக்கிறார். 


இந்நிலையில் படக்குழு நேற்றைய தினம் கேன்ஸ்  திரைப்பட விழாவில்  கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. ரெட் கார்ப்பெட் வரவேற்பில் படக்குழு வரவேற்கப்பட்டத்துடன் இந்திய திரைப்படமொன்று தனித்துவத்துடன் முன்வந்தது பலராலும் பாரட்டப்பட்டது.பிரபுதேவா மற்றும் படத்தின் நாயகன் விஷ்ணு மஞ்சு ஆகியோர் ரெட் கார்ப்பெட் வரவேற்பில் நடந்து வரும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement

Advertisement