விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது சுவாரஷ்யத்துக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 2 நாட்களாக "ஆடிய ஆட்டம் என்ன" டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்க்கு ஏற்றால் போல போட்டியாளர்களும் கெட்டப் போட்டுகொண்டு கேரக்டராகவே நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்றைய நாள் முதல் ப்ரோமோ ரிலீஸாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் ஆகி வெளியேறிய பழைய போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்து தற்ப்போது மாஸாக விளையாடி வருகிறார்கள். இந்நிலையில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கின் படி போட்டியாளர்கள் கெட்டப் போட்டு டான்ஸ் ஆடுகிறார்கள்.
முதலில் தனித்தனியாக ஆடினார்கள். பின்னர் போட்டியாக இரண்டு இரண்டு பேர் டான்ஸ் ஆடுகிறார்கள். இந்த ப்ரோமோவில் "அப்படி போடு போடு..." என்ற பாடல் ஒலிக்கிறது. இந்த பாட்டுக்கு சுனிதா மற்றும் சவுந்தர்யா குத்தாட்டம் போடுகிறார்கள்.
மற்ற போட்டியாளர்கள் அவர்களை கைதட்டி உற்சாகம் செய்கிறார்கள். ஆடிய களைப்பில் கீழே விழுந்த சவுந்தர்யாவிடம் "ஆ யூ ஓகே" பேபி என்று அருண் கேற்கிறார். இப்படி கலகப்பாக இந்த ப்ரோமோ முடிவடைகிறது.
Listen News!